வெள்ளி விழாவை நோக்கி செல்லும் ராமராஜனின் ‘சாமானியன்’… 115 ஆவது நாள் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

vinoth
வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:13 IST)
மேதை படத்துக்குப் பிறகு சாமான்யன் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார் ராமராஜன். அந்த படம் மே 23 ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இதுவரை படம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்ச ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்த பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் படம் ஓடாததற்கு படத்தின் தயாரிப்பாளர்தான் காரணம் என்று ராமராஜன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவரது நேர்காணலில் “நாங்கள் படத்தை எடுத்துக் கொடுத்துவிட்டோம். அதற்கு விளம்பரம் செய்தால்தானே மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர் படத்துக்கு விளம்பரமே செய்யாமல் படத்தைக் கொன்றுவிட்டார். எனக்கும் சம்பள பாக்கியும் கொடுக்கவில்லை.” என ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது சாமான்யன் திரைப்படம் ஆலங்குளத்தில் உள்ள TVP மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 125 நாட்களைக் கடந்து இந்த திரைப்படம் ஓடிவரும் (ஓட்டப்பட்டு) நிலையில் படக்குழு 115 ஆவது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இப்போது இணையத்தில் ட்ரோல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகியுள்ளது. ஆனால் ராமராஜன் இந்த படத்தை 175 நாட்கள் ஓட்டி வெள்ளி விழா நடத்தாமல் விடமாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்