''ராட்சசன்' தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகை ஒப்பந்தம்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (21:34 IST)
கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த 'ராட்சசன்'. இந்த படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த படம் ரீமேக் செய்யும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 
 
ரமேஷ் வர்மா இயக்கும் 'ராட்சசன்' தெலுங்கு ரீமேக் படத்தில் விஷ்ணு மற்றும் அமலாபால் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஷ்ணு கேரக்டரில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸும், அமலாபால் கேரக்டரில் ரகுல் ப்ரித்திசிங்கும் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. தற்போது கிடைத்துள்ள புதிய செய்தியின்படி இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் ரகுல் ப்ரித்திசிங் ஆகிய இருவரும் ஏற்கனவே 'ஜெய ஜானகி நாயகா' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் 'ராட்சசன்' படத்தில் வில்லனாக நடித்த சரவணன், தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்