'தேவ்' படத்தின் தணிக்கை சான்றிதழ்: கார்த்தி தகவல்

திங்கள், 28 ஜனவரி 2019 (20:25 IST)
கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு படங்களும் ஹிட்டாகியுள்ளது. இந்த நிலையில் ஹாட்ரிக் வெற்றியை அவரது 'தேவ்' படம் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தணிக்கை அதிகாரிகள் 'தேவ்' படத்தை பார்த்து 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த தகவலை கார்த்தி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்ததை அடுத்து வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என கார்த்தி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும் அந்தோணி ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

#Dev censored with a U certificate. All set to release on Valentine’s Day! #DevonFeb14 pic.twitter.com/idjLQOQ5Ym

— Actor Karthi (@Karthi_Offl) January 28, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்