நடிகர், நடிகைகள் ஒருபக்கம் நடித்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வேறு தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அப்போதுதான் சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும், அந்த தொழில் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற எண்ணம் உண்டு
சமீபத்தில் ஜிம் ஆரம்பித்த ரகுல், தற்போது ஓட்டல் ஒன்றை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் ஒரு உணவு பிரியை என்றும், எந்த ஊர் சென்றாலும், அந்த ஊரின் ஸ்பெஷல் உணவை சாப்பிடாமல் விடமாட்டேன் என்றும் கூறிய ரகுல், அனைத்து ஊர்களின் ஸ்பெஷல் உணவும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தனது ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் ரகுல் ப்ரித்திசிங் கூறியுள்ளார்.