ரகுல் ப்ரீத் சிங்கின் தீராத ஆசை!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (10:55 IST)
கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.  தற்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் கார்த்தியுடன் தேவ் படத்திலும் நடித்து வருகிறார். இல்லாமல் சில  தெலுங்கு படங்களிலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில், "சினிமாவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த வி‌ஷயம் உணவு. ஒரு ஓட்டலை விடமாட்டேன். எல்லா ஊர் உணவுகளின் ருசியும் தெரியும்.

எந்த ஊருக்கு போனாலும் அங்கு ஸ்பெ‌ஷல் உணவு என்று யாராவது சொன்னால் அதை ருசித்து  பார்க்காமல் விடவே மாட்டேன். எனக்கு உணவு மீதுள்ள பிரியத்தால் ஒரு ஓட்டல் ஆரம்பிக்கவும் விருப்பம் இருக்கிறது. அங்கு எனக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்