ஏகன் படத்துக்கு பிறகு மீண்டும் இயக்குனர் ஆகும் ராஜு சுந்தரம்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:51 IST)
நடன இயக்குனர் ராஜு சுந்தரம் 2008 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து ஏகன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடன இயக்குனராக பணியாற்றி வருபவர் ராஜு சுந்தரம். எல்லா மொழிகளின் முன்னணி கதாநாயகர்களோடும் நெருங்கிய நட்பில் இருப்பவர். இவருடனான நட்பின் காரணமாகவே அஜித் இவரை தனது ஏகன் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார்.

ஆனால் அந்த படம் வெற்றி பெறாததை அடுத்து ராஜு சுந்தரம் மறுபடியும் படம் இயக்கவே இல்லை. இந்நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அவர் ஒரு படம் இயக்க உள்ளார். இந்த முறை அவர் தெலுங்கு நடிகரான சர்வானந்த் நடிப்பில் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்