இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று காங்கிரஸில் ஐக்கியம் ஆகியுள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கன்னையா குமார் காங்கிரஸ் எனும் கப்பல் காப்பாற்றப்பட்டால் இளைஞர்களின் கனவுகள், மகாத்மா காந்தியின் ஒற்றுமை, பகத்சிங்கின் துணிவு, அம்பேத்கரின் சமத்துவ எண்ணம் ஆகியவையும் காக்கப்படும். இதனால்தான் காங்கிரஸில் சேர்ந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.