தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
இதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் ரஜினி- 171 பட போஸ்டர் ரிலீஸானது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இப்படம் ஒரே நாளில் நடக்கும் என்ற தகவல் வெளியாகிறது.
இந்த போஸ்டர் பற்றி பலரும் பல வித கதைகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த போஸ்ட்ரில் கடிகாரம் இடம்பெற்றதற்கான காரணம், லோகேஷின் முதல் படமாக மாநகரம் மற்றும் கைதி ஆகிய இருபடங்களில் இடம்பெற்ற மாதிரி ரஜினி 171 படத்திலும் ஒரே நாளில் நடைபெறும் கதை என கூறப்படுகிறது.
இதில் ரஜினி ஓய்வுபெற்ற காவல் அதிகாரி எனவும் தகவல் வெளியாகிறது
மேலும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது: சூப்பர் ஸ்டார் படம் குறித்து பேசிய அவர், தலைவர் 171 பட டீசர் விரைவில் வெளியாகும். இந்த மாதிரி ரஜினியை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டோம். இதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இது 100 சதவீதம் லோகேஷ் படம் என்று கூறினார்.