''நீ பிறருக்கும் உதவ வேண்டும்''- ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்

Sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (21:06 IST)
ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக இருந்து நடிகராக உயர்ந்து தற்போது, இயக்குனராகவும் வெற்றிகரமாக செயல்பாட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, மாற்றுத் திறனாளி சகோதர்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறார். ஏழை எளிய மக்களின் கல்விக்கும் உதவி செய்து வருகிறார்.
 
இந்த நிலையில்,  நடிகர் ராகவா லாரன்ஸ் தன் வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில், புதுக்கோட்டை சிவசக்திக்கு 4 வயதாக இருக்கும்போது அவரது அம்மா எங்களிடம் உதவி கேட்டார். அவரது அப்பா குடும்பத்தைவிட்டு சென்றதால் சிவசக்தி மற்ரும் சகோதரியை தாயே கவனித்து வந்தார். அதன்பின்னர், இருவரும் என் வீட்டில் வளர்ந்தார்கள்.
 
இந்த  நிலையில், தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சிவசக்தி, உதவி ஆய்வாளர் ஆக வேண்டும் என உழைக்கிறார்.  நிறைய பேருக்கு உதவவும் விரும்புகிறார். கல்வி சக்திவாய்ந்த ஆயுதம் அதனால் இவ்வுலகத்தை மாற்றலாம்...வார்த்தைகளைவிட செயல் வலிமையானது என்று கூறினார்.
 
மேலும், உனக்கு செய்த உதவி மாதிரி நீ பிறருக்கும் உதவ  வேண்டும் என்று கூறி ஒரு சிறுவனை அவரிடம் கொடுத்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸின் செயலுக்கு  பாராட்டுகள் குவிந்து வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்