ஜெயிலர் படத்தின் 3வது சிங்கில் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (19:50 IST)
ஜெயிலர் படத்தின்  3வது சிங்கில் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள படம் “ஜெயிலர்”. இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிளான “காவாலா”, இரண்டாவது பாடல் “டைகர் கா ஹுக்கும்” ஆகியவை வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில் பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில்,  நாளை மாலை  6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்