ஏவிஎம் மியூசியத்தில் பாயும் புலி படத்தில் பயன்படுத்திய விண்டேஜ் பைக்கில் ரஜினி… !

vinoth
வெள்ளி, 1 மார்ச் 2024 (07:37 IST)
தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.

சென்னை வடபழனியில் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி இப்போது புதுப்பிக்கப்பட்டு, திருமண மண்டபமாகவும், பொது நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனை ஏவிஎம் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது.

மற்றொரு பகுதி ம்யூசியமாக மாற்றப்பட்டு, ஏவிஎம் தயாரித்த படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை எல்லாம் வைத்து ஒரு மியூசியமாக மாற்றியுள்ளார்கள். இதை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சென்று பார்த்தார். இந்நிலையில் இப்போது அந்த மியூசியத்தை ரஜினிகாந்த் சென்று பார்த்துள்ளர். மேலும் பாயும்புலி படத்தில் தான் நடித்த மோட்டார் பைக்கில் ஆசையாக ஏறி அமர்ந்து பார்த்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்