விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

Mahendran
வியாழன், 16 மே 2024 (12:47 IST)
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் ’எனது அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவம் செய்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவு செய்தது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்று தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் திடீரென தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார் என்றும் விஜயகாந்த் போன்ற ஒருவரை இனிமேல் பார்க்க முடியாது என்றும் அவரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று தெரிவித்தார்.

மதுரையில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் என்றும் அவர் அந்த வீடியோவில் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்