கோட் படத்தில் AI மூலமாக விஜயகாந்த்… எத்தனை நிமிடங்கள் வருவார்?

vinoth

செவ்வாய், 14 மே 2024 (07:07 IST)
விஜய் அரசியலில் இறங்கப் போவதால் தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக ஒரு கதாபாத்திரமாக உருவாக்கப்பட உள்ளார் என செய்திகள் வெளியாகின. இதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அதுபற்றிய மேலதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விஜயகாந்த் இடம்பெறும் காட்சி படத்தில் இரண்டரை நிமிடங்கள் வரும் என சொல்லப்படுகிறது. மேலும் அவர் இடம்பெறும் காட்சிக்கு படத்தின் க்ளைமேக்ஸுக்கு முன்பாக வரும் என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்