லோகேஷ் தயாரிப்பில் யுடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’… ஷூட்டிங் நிறைவு!

vinoth

வியாழன், 17 ஜூலை 2025 (11:09 IST)
தற்போது தமிழ் சினிமா என்பது யுடியூபர்களால் நிறைந்து வழிகிறது. பல பிரபல யுடியூபர்கள் நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வரிசையில் ஃபைனலி என்ற சேனலின் மூலம் கவனம் ஈர்த்த பாரத் ‘மிஸ்டர் பாரத்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும், மற்றொரு பிரபல யுடியூபர் நிரஞ்சன் இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரணவ் முனிராஜ் இசையமைப்பில், ஓம் நாராயணன் ஒளிப்பதிவில், திவாகர் டென்னிஸ் படத்தொகுப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகிக் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்