லால் சலாம் படத்தின் ஃபுட்டேஜ் மாயம்…. பொங்கல் ரிலீஸில் இருந்து விலகல்?

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:33 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் திருவண்ணாமலை மற்றும் மும்பையில் படமாக்கி முடிக்கப்பட்டன. பின்னர் ஒருநாள் சென்னையில் ஒருநாள் படமாக்கப்பட்டது.

இப்போது ஷுட்டிங் முடிந்து ரிலீஸுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் சில காட்சிகள் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான காட்சிகளை வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரை வரவழைத்து மீட்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருவதாகவும், அதனால் பொங்கல் ரிலீஸில் இருந்து லால் சலாம் பின்வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்