கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Webdunia
வெள்ளி, 17 மே 2024 (07:18 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த டீசரில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினிகாந்த் மிரட்டியிருப்பதாக ரசிகர்கள் புல்லரித்தனர். இதற்கிடையில் இந்த படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக அவர் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வேட்டையன் ஷூட்டிங்கை முடித்துள்ள ரஜினிகாந்த், ஓய்வுக்காக அபுதாபி சென்றுள்ளார்.

இந்நிலையில் கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க ரஜினிகாந்த் ஒரு நல்ல நாள் பார்த்து முடிவு செய்து கொடுத்துள்ளாராம். அந்த தேதியில்தான் கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்