ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ!

vinoth

திங்கள், 13 மே 2024 (07:36 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த டீசரில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினிகாந்த் மிரட்டியிருப்பதாக ரசிகர்கள் புல்லரித்தனர். இதற்கிடையில் இந்த படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக அவர் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் லோகேஷின் மற்ற படங்களைப் போல கூலி திரைப்படமும் ஒரு மல்ட்டி ஸ்டார் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் நடிக்க உள்ளதாக பல நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அந்த வகையில் இப்போது பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்