இனிதே பூஜையுடன் துவங்கியது ரஜினியின் "தர்பார்" படப்பிடிப்பு!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (11:46 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்"  படத்தின் படப்பிடிப்பு சற்றுமுன் பூஜையுடன் துவங்கியது.
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. நேற்று இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 

ரஜினிக்கு ஜோடியாக லேடிய சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து இன்று பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

 
இந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர் முருகதாஸ், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்