தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
இதையடுத்து இளையராஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகரும் இளையராஜாவின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த் “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள் இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி(இளையராஜா), உங்களால் இந்தியாவுக்கேப் பெருமை” எனக் கூறியுள்ளார்.