சினிமாவில் அறிமுகமாகும் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (13:05 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணா சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக உள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருமே இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இலங்கையை சேர்ந்த பிரில்லியண்ட் கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் ரஜினியின் பெற்றோர் நினைவிடத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்