மீண்டும் ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த்…!

புதன், 31 மே 2023 (07:55 IST)
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’ . இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பதும் அவருடன் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா,   ஆகியவர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தின் கடைசி கட்ட காட்சிகளை இயக்குனர் நெல்சன் படமாக்கி வருகிறாராம். இதில் நான்கைந்து நாட்கள் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம். அதோடு படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்