அதில், தேசிய ஊடகங்களே! கேரள வெள்ளத்தின் தாக்கம் என்ன என்பது கொஞ்சமாவது உங்களுக்கு தெரியுமா? இன்னும் இது தேசிய பேரிடராக மாறவில்லை. என் இனிய கேரள மக்களே இதை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜெய்ஹிந்த்! என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ரசூல் பூக்குட்டியின் பகிர்வை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சித்தார்த், 2015-ஆம் ஆண்டு தமிழகம் எத்தகைய கோபத்தில் இருந்ததோ, அதே மனநிலையில் தான் கேரளாவும் இருக்கிறது.