கனமழை காரணமாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது.
கேரளாவில் கடந்து 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் நீரில் மூழ்கி இதுவரை 324 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களை கொட்டும் மழையிலும் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, கேரள மாநிலத்திற்கு உதவும் வகையில் தமிழ் திரையுலகினர் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். அதேபோல், தமிழகத்தில் இருந்து பலரும் ஆன்லைன் மூலமாக கேரள மாநிலத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
கேரள மாநிலத்திற்கு உதவுமாறு ஊடகம், சமூ வலைத்தளங்கள் மூலம் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், சிலருக்கு உதவ மனமிருந்தாலும் எப்படி உதவி செய்வது என்பது தெரியாமல் இருக்கிறது.