33 வருடங்களுக்கு பின் அமிதாப் உடன் நடிக்கிறேன்.. நெகிழ்ச்சியுடன் ரஜினி பகிர்ந்த புகைப்படம்..!

புதன், 25 அக்டோபர் 2023 (12:28 IST)
33 வருடங்களுக்கு பிறகு அமிதாப்பச்சன் உடன் நடிக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 170. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.  
 
இந்த படத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 
 
இந்த நிலையில் அமிதாப்புடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள ரஜினிகாந்த் 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் அவர்களுடன் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்