கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்கள் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே ஆதரவைப் பெற்று வருகின்றன. இதில் உச்சபட்ச வெற்றியைப் பெற்றது விஜய்யின் கில்லி திரைப்படம். கடந்த ஆண்டு இந்த படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு ரிலீஸான அண்ணாமலை திரைப்படம் அவரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் சரத்பாபு, குஷ்பூ, ராதாரவி, மனோரமா உள்ளிட்டவர்கள் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாலச்சந்தரின் கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்திருந்தது.