ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு 'தலைவர்170' பட சூப்பர் அப்டேட்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (19:54 IST)
சூப்பர் ஸ்டார் பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.
 

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில், கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் தொடங்கியது.

இப்படத்தில்  ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம், திருநெல்வேலியில் ,மும்பையில் நடந்த  நிலையில்,  சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நாளை என்பதால் அவரது காமன் டிபிஐ ரசிகர்கள் வெளியிட்டு அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினி 170 பட தயாரிப்பு நிறுவனமான லைகா, அவவரது 170வது படத் தலைப்பை வெளியிட்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் டீசர் நாளை மாலை  மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்