டிசம்பர் 12, 12:12 மணிக்கு வெளியாகும் கவின் பட அப்டேட் இதுதான்..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (18:26 IST)
நாளை டிசம்பர் 12ஆம் தேதி 12:12 மணிக்கு கவின் படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான நாளை கவின் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் நாளை 12:12  மணிக்கு கவின் நடித்த ஸ்டார் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்த படத்தில் கவின் நடிகராக நடித்துள்ளதை அடுத்து  சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளின் போது இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனை அடுத்து காலேஜ் சூப்பர் ஸ்டார் என்ற பாடலின் சிங்கிள் வீடியோ நாளை வெளியாக இருப்பதை அடுத்து கவின் ரசிகர்கள் இந்த வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இளன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் என்பதும்  இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்