சந்தோஷத்தில் திளைக்கும் ரெஜினா

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (18:43 IST)
‘மாநகரம்’ வெற்றியால் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், சந்தோஷத்தில் இருக்கிறார் ரெஜினா.
 


 

கடந்த வருடம் ரெஜினா நடிப்பில் ஒரு தமிழ்ப் படம் கூட ரிலீஸாகவில்லை. ஆனால், இந்த வருடம் மார்ச் மாதம் ரிலீஸான ‘மாநகரம்’ படத்தின் வெற்றி, ஏகப்பட்ட வாய்ப்புகளை அவருக்கு வழங்கியிருக்கிறது. விரைவில் ரிலீஸாகவுள்ள செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்துள்ள ரெஜினா கைவசம், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’, ‘பார்ட்டி’, ‘ராஜதந்திரம் 2’ ஆகிய தமிழ்ப் படங்களும், ‘நட்சத்திரம்’ என்ற தெலுங்குப் படமும் இருக்கிறது.

அத்துடன், ‘மாநகரம்’ ஜோடியான சந்தீப் கிஷண் – ரெஜினா நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘ரா ரா கிருஷ்ணய்யா’ தெலுங்குப் படத்தை, தமிழில் டப் செய்து வெளியிடும் வேலைகளும் நடந்து வருகின்றன.
அடுத்த கட்டுரையில்