நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்துக்குப் பிறகு மீண்டும் அண்ணாத்த படத்தில் சில பஞ்ச் வசனங்களை தானே தனக்காக எழுதியுள்ளாராம்.
நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் நடிப்பைத் தவிர இயக்கம் போன்ற பணிகளில் மூக்கை நுழைக்க மாட்டார். இயக்குனர் சொல்வதை அப்படியே செய்துவிட்டு போய்விடுவார். ஆனால் அவர் தான் தயாரித்த பாபா படத்தில் தன் கதாபாத்திரத்துக்காக சில பன்சு டயலாக்குகளைத் தானே எழுதினார். ஆனால் அந்த டயலாக்குகள் பெரிதாக பேசப்பட்டாலும், படம் பெரிய அளவில் ஓடவில்லை.
இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தில் அதே போல தன் கதாபாத்திரத்துக்காக தானே சில வசனங்களை யோசித்து இயக்குனர் சிறுத்தி சிவாவிடம் சொல்லியுள்ளாராம். அவற்றில் சிறப்பாக உள்ளதை பயன்படுத்திக்கொள்ள சிவா சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.