தந்தையை பழிவாங்க மகளை உயிரோடு எரித்த கும்பல்… உ.பி.யில் நடந்த பயங்கரம்!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:13 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் குடும்பப் பகைக் காரணமாக ஒரு பெண்ணை கை கால்களை கட்டிபோட்டு உயிரோடு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பர்சோலி கிராமத்தில் பிரதீப் சிங் - கன்வர் சிங் என்பவர்களின் குடும்பத்துக்கு இடையே காலம் காலமாக பகை இருந்துள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் நடந்த சண்டையில் கன்வர் சிங்கை பிரதீப் சிங் கொலை செய்துள்ளார். இதனால் அவர் இப்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் பிரதீப் சிங்கை பழிவாங்க காத்திருந்த கன்வர் சிங்கின் உறவினர்கள் இப்போது ஒரு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். கன்வீர் சிங்கின் மனைவி அவரைப் பார்க்க சிறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மகள் ஷரதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட கும்பல் ஷரதா வீட்டு வாசலில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த போது அவர் கை கால்களை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி அவரைக் கொளுத்தியுள்ளனர். இதில் உடல் முழுவதும் எரிந்து கருகிய அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்