ஹாலிவுட் நடிகர்களை வைத்து படமெடுக்கும் ஐடியா இல்லை! – இயக்குனர் ராஜமௌலி!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (10:41 IST)
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி தனக்கு ஹாலிவுட் நடிகர்களை வைத்து படம் இயக்கும் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடித்து உருவாகியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பட விழாவில் பேசிய இயக்குனர் ராஜமௌலி “ஹாலிவுட் நடிகர்களை வைத்து படம் இயக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இந்தியாவிலேயே சிறந்த நடிகர்கள் பலர் உள்ளனர். எப்போதும் கதைக்கு தேவையான கதாநாயகர்களை தேடுவேன். கதாநாயகர்களுக்கு ஏற்ற கதையை தேட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்