பெற்றோரின் போட்டோவை முதன்முறையாக வெளியிட்ட ரைசா - ஜாடை யாரு மாதிரி இருக்குனு சொல்லுங்க!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (08:55 IST)
பிக் பாஸ் குயின் "ஓவியா" என்றால் பிக் பாஸ் பிரின்சஸ் "ரைசா"...! அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர்கள் இருவரும் பெரும் பிரபலமடைந்து தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டனர். அந்த     நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது முதன் முறையாக தனது அப்பா அம்மாவின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவர்கள் புதுமண தம்பதியாக இருந்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் ரைசா அவரது அப்பா மாதிரி தான் இருக்காங்க என ஒரு சிலரும்... இல்ல இல்ல ரைசாவிற்கு அப்படியே அம்மா ஜாடை தான் எனவும் கூறி வருகின்றனர். நீங்களே சரியா பார்த்து சொல்லுங்கள் ரைசா யாரு மாதிரி இருக்காங்க..? 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My parents when they were newly married !! #twinninggoals

A post shared by Raiza Wilson (@raizawilson) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்