சந்திரமுகியா துர்காவா? பி வாசுவால் குழப்பத்தில் லாரன்ஸ்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:25 IST)
இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமான சந்திரமுகி 2 படம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் லாரன்ஸ் தயாரித்து நடிக்கும் துர்கா என்ற படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் சந்திரமுகி 2 படம் கைவிடப்பட்டதா எனக் கேள்வி எழுந்தது. ஆனால் இயக்குனர் பி வாசு இப்போது கன்னடம் திருஷ்யம்2 வின் வேலைகளில் இருப்பதால் அவர் வந்ததும் சந்திரமுகி 2 வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் சந்திரமுகி 2 மற்றும் துர்கா ஆகிய இரு படங்களிலும் அவர் நடிக்கலாம் என சொல்லபடுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்