தடுப்பூசி செலுத்திய நடிகர் சூர்யா !! வைரல் புகைப்படம்

செவ்வாய், 22 ஜூன் 2021 (18:42 IST)
நடிகர் சூர்யா இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், சினிமா நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டும், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகியும், தடுப்பூசி செலுத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கல்வியாளருமான நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும்ம் நடிகையுமான ஜோதிகா இருவரும் இணைந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதுகுறித்த புகைப்படத்தை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர். இது வைரலாகி வருகிறது.

#Vaccinated pic.twitter.com/3SJG9wYPFD

— Suriya Sivakumar (@Suriya_offl) June 22, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்