ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

vinoth

சனி, 18 அக்டோபர் 2025 (09:26 IST)
இந்தி சினிமாவில் ஆஹா லைஃப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2 , தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். ராதிகா, தமிழ்சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், சித்திரம் பேசுதடி 2, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில்  நடித்திருந்தார்.

இப்போது இந்தியாவில் ஓடிடி நடிகை என சொல்லப்படும் அளவுக்கு பல நேரடி ஓடிடி படங்கள் மற்றும் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. ராதிகா ஆப்தே வாய்ப்புகள் குறித்து அஞ்சாமல் சினிமாவில் கடைபிடிக்கப்படும் பாகுபாடு குறித்துத் தொடர்ச்சியாக தைரியமாகப் பேசி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் “இந்தியப் படங்களில் கதை என்பது ஹீரோக்களுக்காகதான் எழுதப்படுகிறது. ஏனென்றால் கதை முழுவதும் அவனைப் பற்றிதான். ஹீரோயின்களூக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை. சொல்லப்போனால் ஹீரோயின்கள் கவர்ச்சிக் காட்டுவதற்காகதான் கதையில் வருகிறார்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்