நான் விஜய் மாதிரி வேணும்னே பண்ணல… நடிகர் சஞ்சீவ் வருத்தம்!

vinoth

புதன், 15 அக்டோபர் 2025 (08:36 IST)
நடிகர் விஜய்யின் கல்லூரித் தோழரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களின் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார். அதற்குக் காரணம் அவர் விஜய்யின் நடிப்பை அப்படியே நகலெடுத்து நடிப்பதுதான். அதனால் அவரை ‘குட்டி தளபதி’,’சின்ன தளபதி’ என்றெல்லாம் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து சஞ்சீவ்வின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீ இதுபற்றி தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் “சஞ்சீவிடம் அவன் விஜய் மாதிரி பண்ணுவது சூப்பரா இருக்கு என சொல்லியே அவனை இப்படி ஆக்கிவிட்டார்கள். நான் இதுபோல பண்ண வேண்டாம் என அவனிடம் பலமுறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. இதே சஞ்சீவ்தான் ‘திருமதி செல்வம்’ என்ற சீரியலில் நன்றாக நடித்து நல்ல பெயரை வாங்கினான். நான் அவனிடம் “நீ நல்லா நடிக்கலன்னு சொல்றவங்களக் கூட நம்பு. ஆனால் சூப்பர் சூப்பர்னு சொல்றவங்கள நம்பாத’ என சொன்னேன். ஆனால் அவன் கேட்கவில்லை.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சஞ்சீவ் தன் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் விஜய் மாதிரி வேணும்னே பண்ணலன்னு எனக்குத் தெரியும். என்ன சுத்தி இருக்குறவங்களுக்கும் தெரியும். மெட்டி ஒலி சீரியல்ல இருந்து இப்ப வர நான் ஒரே மாதிரிதான் நடிக்கிறேன். நான் வேணும்னு பண்ணல, எனக்கு அப்படிதான் வருது. இப்படி என்னை விமர்சிப்பது எனக்கு வருத்தமா இருக்கு. 35 வருஷமா நாங்க நண்பர்களா இருக்கோம். அதுக்காக இதெல்லாம் தாங்கிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்