பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக பைசன்நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்ட அரசியலை கபடி வீரரான மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையோடு இணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வழக்கமாக மாரி செல்வராஜின் படங்களுக்கு சாதி ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வரும். ஆனால் இந்த படத்துக்கு ஏகோபித்த நேர்மறையான ஆதரவு கிடைத்து வருகிறது.