நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

vinoth
சனி, 23 நவம்பர் 2024 (15:20 IST)
நானும் ரௌடிதான் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான ஆர் ஜே பாலாஜி, அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது அவர் சித்தார்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சொர்க்கவாசல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்த படத்தின் கதைக்களம் 1999 ஆம் ஆண்டு சென்னை மத்தியச் சிறைச்சாலையில் நடந்த ஒரு கலவரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தைத் தமிழகத்தில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மூலமாக எஸ் ஆர் பிரபு ரிலீஸ் செய்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. சிறைச்சாலையில் கலவரம் வெடித்து போலீஸாரின் கைமீறி செல்ல அதில் அப்பாவியான கதாநாயகன் மாட்டிக்கொண்டு அதில் இருந்து வெளிவருவதை சொல்லும் படமாக இருக்கும் என்பதை டிரைலர் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்