விரைவில் குயின் 2... கெளதம் மேனனின் பதிலால் ரசிகர்கள் ஆர்வம்!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (08:32 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் என்ற இணையத்தளத் தொடர் MX player வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. ஜெயலலிதாவின் பள்ளி வயது முதல் துவங்கி அவரது அரசியல் பயணம் இடம்பெற்றிருந்த முதல் சீசன் அமோக வரவேற்பை பெற்றது.

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் ரம்யா கிருஷ்ணன்,அஞ்சனா ஜெயபிரகாஷ்,அனிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து இதன் இரண்டாவது சீசனுக்கான கதை எழுதும் வேளையில் கெளதம் மேனன் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்நிலையில் குயின் 2 விற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கமல் ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு 2 இயக்க திட்டமிட்டிருந்த கெளதம் மேனன் தற்போது குயின் 2 இயக்கிய பிறகு மற்ற வேலைகளை கவனிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்