’புஷ்பா’ டிரைலர் திட்டமிட்டபடி வெளியாகாதது ஏன்? படக்குழு விளக்கம்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (18:35 IST)
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்த ட்ரைலரை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்
 
ஆனால் இன்று மாலை 6.03 ஆகிய நிலையிலும் புஷ்பா டிரைலர் வெளியாகாததால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு சில  தொழில்நுட்ப கோளாறு காரணமாக ’புஷ்பா’ ட்ரெய்லர் ரிலீஸ் ஆகவில்லை என்றும் விரைவில் இந்த ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பக்த் பாசில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கி உள்ளார் என்பதும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்