ஜிவி பிரகாஷ்- கவுதம் மேனன் இணையும் திரைப்படம்: இன்று டிரைலர் ரிலீஸ்!

வியாழன், 2 டிசம்பர் 2021 (13:21 IST)
ஜிவி பிரகாஷ்- கவுதம் மேனன் இணையும் திரைப்படம்: இன்று டிரைலர் ரிலீஸ்!
ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு செல்பி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 4,40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமாறன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும் மூன்று பாடல்கள் ஏற்கனவே கம்போஸ் செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்