அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே 800 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்துள்ளது.
தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2; தி ரூல் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெளியான நாள் முதலே பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 4 நாட்களில் புஷ்பா 2 உலகம் முழுவதும் வசூலித்த மொத்த கலெக்ஷன் 829 கோடி ரூபாய் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய சினிமாவில் இதுவரை 1000 கோடி கலெக்ஷனை தொட்ட கேஜிஎப், பாகுபலி, ஜவான் போன்ற படங்களில் முதல் 4 நாட்கள் வசூலை விட அதிகமாகும். இதன்மூலம் இந்திய சினிமாவிலேயே வெளியான 4 நாட்களில் அதிக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை அள்ளிய படமாக புஷ்பா 2 சாதனை படைத்துள்ளது.
மேலும் அடுத்த 2 நாட்களில் புஷ்பா 2 திரைப்படத்தின் வசூல் 1000 கோடியை தொட்டுவிட்டால் இந்திய திரைப்படங்களில் மிக வேகமாக ஆயிரம் கோடி வசூலை தொட்ட படமாகவும் புஷ்பா 2 சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K