அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து திரையரங்க நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அல்லு அர்ஜுன் நிவாரண இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரேவதி என்ற பெண் நெரிசலால் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான திரையரங்கு உரிமையாளர் சந்தீப், மேனேஜர் நாகராஜ் மற்றும் பால்கனி பொறுப்பாளர் ஸ்ரீ கந்தகம் விஜய் சங்கர் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.