கோடிக் கணக்கில் செலவு செய்து எடுத்தக் காட்சிகளை வேண்டாம் என நிராகரித்த புஷ்பா 2 இயக்குனர்!

vinoth
திங்கள், 15 ஜூலை 2024 (07:40 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் ஷூட் முடியாததால் டிசம்பர் 6 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாமதத்துக்குக் காரணமே இயக்குனர் சுகுமார் எடுத்த ஒரு முடிவுதானாம். பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த சில காட்சிகள் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் அதை அப்படியே ஓரம்கட்டிவிட்டு, மீண்டும் ஷூட் செய்யவேண்டும் என சொல்லிவிட்டாராம். அதனால் அந்த காட்சிகளை மீண்டும் ஷூட் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்