பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
அல்லு அர்ஜுன் கைதால் புஷ்பா 2 வசூல் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாகி 15 நாட்களில் உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் 21 நாட்களில் 1700 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் தயாரான படங்களில் டங்கல் -2000 கோடி ரூபாய் மற்றும் பாகுபலி 2 -1800 கோடி ரூபாய் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் புஷ்பா 2 அதிகம் வசூல் செய்த படமாக மாறியுள்ளது.