பிரியங்கா சோப்ராவை டார்ச்சர் செய்த இயக்குனர்!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (08:42 IST)
நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு படத்தில் கவர்ச்சி நடனம் ஆட சென்ற போது இயக்குனர் கொடுத்த தொல்லைகளைப் பற்றி பேசியுள்ளார்.

பாலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் மட்டும் நடித்துள்ளார். தொடர்ந்து குவாண்டிகோ உள்ளிட்ட ஹாலிவுட் தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ப்ரியங்கா சோப்ரா பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனாஸை மணம் முடித்தார். நிக் ஜோனாஸ் ப்ரியங்கா சோப்ராவை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது அந்த சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது மிகப்பெரிய நடிகையாக வளர்ந்துள்ள அவர் ஆரம்ப காலத்தில் பாலிவுட்டில் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் பற்றி பேசியுள்ளார். ஒரு பிரம்மாண்டமான படத்தில் கவர்ச்சி நடனம் ஆட அவரை அழைத்துள்ளனர். அதற்கு சம்மதித்து அவரும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அந்த பாடலில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு ஆடையாக கழட்டி எறிந்து அவர் ஆடவேண்டுமாம். ஆனால் பாடலின் நீளம் அதிகமாக இருந்ததால் கடைசில் மிகவும் ஆபாசமாக இருக்கும் என நினைத்த பிரியங்கா சோப்ரா இயக்குனரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அந்த இயக்குனரோ உடை வடிவமைப்பாளரிடம் என்ன செய்வீர்களோ தெரியாது , பாடலின் இறுதியில் அவரின் உள்ளாடைகளாவது தெரியவேண்டும் எனக் கூறினாராம். இதனால் பெரிய பிரச்சனையாக பின்னர் தயாரிப்பாளரும் நடிகரும் தலையிட்டு அந்த பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்