பிரியங்கா, நிக் ஜோன்ஸ் விவாகரத்தா? ஹாலிவுட்டின் ஹாட் டாப்பிக்!

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (12:04 IST)
அண்மையில் திருமணம் செய்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோன்ஸும் விவாகரத்து செய்துகொள்ளவிருப்பதாக செய்தி பரவி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
 

 
வித்யாசமான மற்றும் தைரியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சில வருடங்களுக்கு முன் ஹாலிவுட்டில் நடிக்க தொடங்கிய இவர் அங்கே பாடகராக இருக்கும் நிக் ஜோன்ஸ்  என்பவரைக் காதலித்தார். ஆறு மாதம் காதல் தொடர்ந்ததையடுத்து  கடந்த டிசம்பர் 2மத்தேதி இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 
 
இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக பாலிவுட் திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 
திருமணம் முடிந்த 3 மாதத்துக்குள் இவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக, ஓகே என்ற ஹாலிவுட்  பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. காரணம், திருமணத்துக்குப் பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும்,  எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை என்றும் வேலை, பார்ட்டிக்குச் செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உள்ளிட்ட பல விஷயத்தில் இருவருக்கும் பிரச்னை நிலவுவதால் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 
 

 
இந்த விவகாரம் ஹாலிவுட் , பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது ஆனால், தற்போது பிரியங்காவும் நிக் ஜோனாஸூம் குடும்பத்துடன் மியாமியில் விடுமுறையை கழித்து வருவதாகவும் ஆதலால் இந்த விவாகரத்தில் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என்றும் பிரியங்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்