நாரப்பா பட ரிலீஸ்… கொண்டாட்டத்துடன் புதிய புகைப்படங்களை வெளியிட்ட பிரியாமணி!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (15:57 IST)
நடிகை பிரியாமணி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பருத்தி வீரன் படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக நிலை நிறுத்திக் கொண்ட பிரியாமணி, தேசிய விருது வரை சென்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி எனக் கிடைத்த வேடங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் தொடர் கவனம் பெற்றது. அதையடுத்து இப்போது அதன் சீசன் 2 வெளியாகி கவனத்தைப் பெற்ற நிலையில் நேற்று அவர் நடிப்பில் நாரப்பா திரைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார்.
 

இந்நிலையில் இப்போது இணையத்தில் இளமையான தோற்றத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்