வேற வழியே இல்லாமல் ஹிட் படத்தின் ரீமேக்கை எடுக்கும் விமல்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (15:47 IST)
விமல், ராஜ்கிரண் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவான மஞ்சப்பை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

மஞ்சப்பை என்பது கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருகிறவர்களை கிண்டலாக குறிப்பிடும் வார்த்தை. கிராமத்தவர்கள் அதிகம் மஞ்சப்பையை பயன்படுத்துவதால் இப்படியொரு பெயர். அதையே தன் படத்துக்கு தலைப்பாக வைத்து கிராமத்தில் இருந்து ஊருக்கு வரும் ஒரு முதியவரின் போராட்டங்களை சொன்னப் படம் மஞ்சப்பை. அந்த முதியவராக ராஜ்கிரண் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இப்போது உருவாக்க உள்ளார் இயக்குனர் ராகவன்.

மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த விமல், லட்சுமி மேனன் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் அனைவரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ராகவனே தயாரிக்க உள்ளார். இதற்கான வேலைகள் இப்போது தொடங்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எந்த வெற்றிப்படமும் இல்லாமல் விமலின் சினிமா வாழ்க்கை தொய்வுப் பாதையில் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்