நடிகர் கார்த்தி தற்போது 'வா வாத்தியாரே ' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 'கைதி 2' படம், ஹிட் 3 படம் என்பது உள்பட, ஒரு சில படங்களில் அவர் நடிக்க இருந்தாலும், அவரது அடுத்த படம் என்பது 'டாணாக்காரன்' இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாக உள்ள படம்தான் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை முழுக்க முழுக்க ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இது ஒரு மீனவ குடும்பத்தின் கதை என்பதால், ஒரு மீனவ கிராமத்தையே ராமேஸ்வரம் பகுதியில் செட் போடும் வகையில் கலை இயக்குனர் பணியாற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், ராமேஸ்வரம் கடற்கரை ஓர பகுதிகளிலும், ராமேஸ்வரம் கடலிலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.